பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் புறநகர் வளர்ச்சி குழுமத்தால் பின்னலாடை ஏற்றுமதி எழுச்சி பெறும்!

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:''புறநகர் வளர்ச்சி குழுமம் மூலமாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித்துறை, புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் அடையும்,''என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பிய கடிதம்:ஏ.இ.பி.சி., கோரிக்கையை ஏற்று, தொழில்துறையினர் கலந்துரையாடல் நடத்தி, தகுந்த ஆலோசனை வழங்கியது, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அனைத்து
 திருப்பூர் புறநகர் வளர்ச்சி குழுமத்தால் பின்னலாடை ஏற்றுமதி எழுச்சி பெறும்!

திருப்பூர்:''புறநகர் வளர்ச்சி குழுமம் மூலமாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித்துறை, புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் அடையும்,''என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பிய கடிதம்:ஏ.இ.பி.சி., கோரிக்கையை ஏற்று, தொழில்துறையினர் கலந்துரையாடல் நடத்தி, தகுந்த ஆலோசனை வழங்கியது, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அனைத்து துறைகளிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றும், தங்களின் லட்சியத்துக்கு, பக்கபலமாக இருப்போம்.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு, நன்றி தெரிவித்து கொள்கிறோம். தமிழக முதல்வருக்கு, திருப்பூர் மாவட்டத்தின் மீது உள்ள பற்றுதலை இதன்மூலம் காண முடிகிறது.புறநகர் வளர்ச்சி குழுமம் மூலமாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித்துறை, புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் அடையும்; திருப்பூர் தொழில்துறையினர் புதிய உத்வேகத்துடன் செயல்பட உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X