கட்டுப்பாடற்ற வாகனங்கள் மீது நடவடிக்கை; பள்ளி விடும் நேரத்தில் நகருக்குள் விரைவதால்.. | Dinamalar

தமிழ்நாடு

கட்டுப்பாடற்ற வாகனங்கள் மீது நடவடிக்கை; பள்ளி விடும் நேரத்தில் நகருக்குள் விரைவதால்..

Added : நவ 24, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி நேரத்தில் நகருக்குள் கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாக உள்ளது.திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட பகுதிகளில் 2 அல்லது 3 பள்ளிகள் அருகருகே உள்ளன. குறிப்பாக ஜி.டி.என்., சாலை ரோடு, போஸ்ட் ஆபிஸ் ரோடு, ஏ.எம்.சி., ரோடு மற்றும் மாநகராட்சி அலுவலக சாலை என முக்கிய வீதிகளில் பள்ளிகள் உள்ளன.ஒவ்வொரு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி நேரத்தில் நகருக்குள் கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாக உள்ளது.

திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட பகுதிகளில் 2 அல்லது 3 பள்ளிகள் அருகருகே உள்ளன. குறிப்பாக ஜி.டி.என்., சாலை ரோடு, போஸ்ட் ஆபிஸ் ரோடு, ஏ.எம்.சி., ரோடு மற்றும் மாநகராட்சி அலுவலக சாலை என முக்கிய வீதிகளில் பள்ளிகள் உள்ளன.ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 500 முதல் 1000 மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்குள்ள பள்ளிகள் ஒரே நேரத்தில் துவங்கி மாலையில் முடிகின்றன. இதனால் பள்ளி நேரங்களில் காலையும், மாலையும் குழந்தைகள் பெற்றோர்கள் என சாலைகள் நிரம்பி வழிகின்றனர்.இந்நேரத்தில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நகர்பகுதிக்குள் உலா வருகின்றன.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல இந்த ரோடுகளில் அதிவிரைவாக செல்கின்றன. புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களும் இதே நேரத்தில் நகருக்குள் வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு வழிகாட்ட பள்ளி சார்பாக ஊழியர்களும் நிறுத்தப்படுவதில்லை.இதனால் சாலையை கடக்கும் குழந்தைகள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.

இதற்கு தீர்வுகாண பள்ளி நிர்வாகம் அல்லது அரசுத் துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் வாகன போக்குவரத்தை மாற்றி அமைப்பது நல்லது. நகருக்குள் பெரிய வாகனங்கள் நுழைவதை தவிர்த்தாலே விபத்துகளை குறைக்க முடியும். சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X