சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணை நோய்க்கு பசு பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : கரியாம்பட்டியில் காணை நோய்க்கு சினை பசு பலியானது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிலக்கோட்டை ஒன்றியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. கரியாம்பட்டியில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. இப்பகுதியினர் நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி கால்நடை மருந்தகங்களுக்கு சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டு செல்கின்றனர்.கடந்த

நிலக்கோட்டை : கரியாம்பட்டியில் காணை நோய்க்கு சினை பசு பலியானது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. கரியாம்பட்டியில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. இப்பகுதியினர் நிலக்கோட்டை, சிலுக்குவார்பட்டி கால்நடை மருந்தகங்களுக்கு சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டு செல்கின்றனர்.கடந்த காலங்களில் மழைக்காலம் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.

தற்போது வரை தடுப்பூசி வழங்காததால் காணை நோய் பரவி வருகிறது.முன்பு கிராமம் கிராமமாகச் சென்று கால்நடை துறையினர் முகாம் நடத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்கினர். தற்போது மருந்தகங்களுக்கு கால்நடைகளை கொண்டு சென்றாலும் ஊசி போடுவது இல்லை என விவசாயிகள் புகார் செய்கின்றனர்.

இந்நிலையில் கரியாம்பட்டி சந்திரகுமார் என்பவரின் 10 மாத சினைப் பசு நேற்று பலியானது. மற்ற மாடுகளுக்கும் வாய் காணை நோய் இருப்பதால் கிராமங்களில் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X