இந்தியா

'டாடி ஆறுமுகம்' மகன் பாரில் ரகளை இருவர் கைது; 3 பேர் தலைமறைவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரியில், போதையில் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய, 'யு டியூப்' பிரபலம் 'டாடி ஆறுமுகத்தின்' மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற யு டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த இவர், புதுச்சேரி காமராஜ் சாலை இந்திரா சிக்னல் பகுதியில், 'டாடி
 'டாடி ஆறுமுகம்' மகன் பாரில் ரகளை இருவர் கைது; 3 பேர் தலைமறைவு

புதுச்சேரி:புதுச்சேரியில், போதையில் ஊழியரை தாக்கி பாரை சூறையாடிய, 'யு டியூப்' பிரபலம் 'டாடி ஆறுமுகத்தின்' மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.
'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற யு டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த இவர், புதுச்சேரி காமராஜ் சாலை இந்திரா சிக்னல் பகுதியில், 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார்.


போதையில் குத்தாட்டம்

உணவகத்தை, ஆறுமுகம் மகன் கோபிநாத், 33, கவனித்து வருகிறார். இவரது சித்தப்பா மகன் ஜெயராம், 25, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தாமு, 32; மோகன், 28; ராஜேஷ், 25 ஆகியோர் வேலை செய்கின்றனர். கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும் 21ம் தேதி இரவு, ஏ.கே. டார்வின் ஓட்டலுக்கு சென்றனர். அங்கு மதுபான பாரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து, குத்தாட்டம் போட்டுள்ளனர்.

ஊழியர்களை காரணமின்றி அழைத்து, மரியாதை இல்லாமல் பேசினர்.இரவு 11:00 மணிக்கு பார் மூடும் நேரமானதும், கிளம்ப மறுத்து தகராறு செய்த ஐந்து பேரும், பீர் பாட்டில்களை உடைத்து தாக்கியதில் ஊழியர் ஜார்ஜஸ் சினாஸ்க்கு வலது கை, காலில் காயம் ஏற்பட்டது. பின், அவர்கள் தப்பி ஓடினர். ஜார்ஜஸ் சினாஸ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அவரது புகார்படி முத்தியால்பேட்டை போலீசார், கோபிநாத் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் தாமு, ஜெயராம் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர், கோபிநாத் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.


போலீசுக்கு அர்ச்சனை


பாரில் இருந்து போதையில் வெளியே வந்த கோபிநாத் உள்ளிட்ட ஐந்து பேரும் சாலையில் நிற்க முடியாத அளவிற்கு தள்ளாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த முத்தியால்பேட்டை ஏட்டு மோகன், 'என்ன பிரச்னை' என கேட்டுள்ளார்.அவரிடம், 'ஓசியில் பிரியாணி வாங்கி தின்னும் ஆட்கள், நீங்கள் என்னை எப்படி கேள்வி கேட்கலாம்' என, கூறி, ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X