சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுரபி கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : மாணவியரை பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக தலைமறைவான திண்டுக்கல் சுரபி கல்லுாரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் -- பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் கல்லுாரியின் தாளாளர் ஜோதிமுருகன் மீது பாலியல் குற்றம்சாட்டி மாணவர்கள்

திண்டுக்கல் : மாணவியரை பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக தலைமறைவான திண்டுக்கல் சுரபி கல்லுாரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் -- பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் கல்லுாரியின் தாளாளர் ஜோதிமுருகன் மீது பாலியல் குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோதிமுருகன், விடுதி காப்பாளர் அர்ச்சனா மீது போக்சோ வழக்கு பதிவானது. அர்ச்சனா கைதானார். ஜோதிமுருகன் தலைமறைவானார். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அவரை தேடி வந்தன.

இந்நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் சரணடைந்தார். இதனையறிந்த கல்லுாரி மாணவர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாமதமின்றி கல்லுாரியை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாணவர்களுக்கு உரிய கல்விப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மாணவரின் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைக்க என்பது உட்பட 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசாரின் தொடர் பேச்சு வார்த்தையில் ஏ.டி.எஸ்.பி., சந்திரன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X