தமிழ்நாடு

நீர்நிலைகளுக்கு பி.ஏ.பி., தண்ணீர் எதிர்பார்ப்பு!: வீணாவதை தடுக்க புது யோசனை

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021
Share
Advertisement
பல்லடம்:பி.ஏ.பி., பாசன நீர் வீணாவதை தடுக்க, குளம் குட்டைகளுக்கு தண்ணீரை பாய்ச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பருவ காலம் என்பதால், விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது. இதற்கிடையே, பாசன நீரும், பி.ஏ.பி.,யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதை, குளம் குட்டைகளில் சேமித்து
நீர்நிலைகளுக்கு பி.ஏ.பி., தண்ணீர் எதிர்பார்ப்பு!: வீணாவதை தடுக்க புது யோசனை

பல்லடம்:பி.ஏ.பி., பாசன நீர் வீணாவதை தடுக்க, குளம் குட்டைகளுக்கு தண்ணீரை பாய்ச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பருவ காலம் என்பதால், விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது. இதற்கிடையே, பாசன நீரும், பி.ஏ.பி.,யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதை, குளம் குட்டைகளில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதற்கிடையே, திருமூர்த்தி அணையிலிருந்தும் பி.ஏ.பி.,க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர் மழையால், விவசாய கிணறுகள் நிரம்பி, போதிய தண்ணீர் கிடைத்துள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் பாசன நீரை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.பி.ஏ.பி., நீரை அந்தந்த பகுதி குளம் குட்டைகளில் சேகரித்து வைப்பதன் மூலம், எதிர்வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து, விவசாய சங்க பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X