போலீசாரின் அலைபேசி மேளா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் அலைபேசி மேளா

Added : நவ 24, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.8 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 70 அலைபேசிகளை மீட்ட போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.மாவட்டத்தில் சமீப நாட்களாக அலைபேசிகள் திருடு போவதாக அனைத்து ஸ்டேஷன்களிலும் வழக்குகள் பதியப்பட்டது. இப் புகார்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து எஸ்.பி. ஸ்ரீனிவாசன் இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தினார். இதையடுத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.8 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 70 அலைபேசிகளை மீட்ட போலீசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மாவட்டத்தில் சமீப நாட்களாக அலைபேசிகள் திருடு போவதாக அனைத்து ஸ்டேஷன்களிலும் வழக்குகள் பதியப்பட்டது. இப் புகார்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து எஸ்.பி. ஸ்ரீனிவாசன் இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தினார். இதையடுத்து சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, எஸ்.ஐ., ரெய்கானா, போலீஸ் ராஜசேகர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அலைபேசியின் ஐ.எம்.இ.ஐ., எண்கள் மூலம் தேடும் பணிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து காணாமல் போன ரூ.8 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 70 அலைபேசிகள் மீட்கப்பட்டன. நேற்று எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உரியவர்களை நேரில் அழைத்து ஒப்படைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X