செம்பட்டி - -பழநி ரோட்டில் பள்ளங்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
செம்பட்டி : மெட்டூர் -- -பழநி ரோட்டில் அதிகரிக்கும் பள்ளங்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வாகன போக்குவரத்து உள்ளது. அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப ரோடு பராமரிப்பு இல்லை. ஜம்புதுரை கோட்டை, காமுபிள்ளைசத்திரம், எஸ்.பாறைப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, சுரக்காய்பட்டி, தர்மத்துப்பட்டி,

செம்பட்டி : மெட்டூர் -- -பழநி ரோட்டில் அதிகரிக்கும் பள்ளங்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான வாகன போக்குவரத்து உள்ளது. அதிகரிக்கும் போக்குவரத்திற்கு ஏற்ப ரோடு பராமரிப்பு இல்லை. ஜம்புதுரை கோட்டை, காமுபிள்ளைசத்திரம், எஸ்.பாறைப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, சுரக்காய்பட்டி, தர்மத்துப்பட்டி, கோவிந்தாபுரம், பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி பகுதிகளில் ரோடு சேதமடைவது வாடிக்கையாகிவிட்டது.

ரோட்டில் அடுத்தடுத்து உருவாகும் பள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய மழையால் இவை பெரும் குழிகளாக மாறியுள்ளன. கனரக வாகனங்கள் எதிரே வரும்போது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் சேதமடைந்த பகுதிகளில் சிக்கி நிலை தடுமாறுகின்றனர்.வாகன விபத்துகள் தொடர்ந்தாலும் ரோடு பராமரிப்பில் அதிகாரிகளின் அக்கறை காட்டுவதில்லை. தற்காலிகமாக 'பேட்ச் ஒர்க்' பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X