சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மன நோயாளிக்கான மாத்திரையை மாற்றி : ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:மனநோயாளிக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை காலில் புண் இருந்தவருக்கு கொடுத்ததால் அவர் மயங்கி விழுந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் 47. மீன்பிடி தொழில் செய்கிறார். இவரது மருமகன் மணிகண்டன் 30, என்பவருக்கு காலில் புண் இருந்துள்ளது. இதற்காக தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார

ராமநாதபுரம்:மனநோயாளிக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையை காலில் புண் இருந்தவருக்கு கொடுத்ததால் அவர் மயங்கி விழுந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் 47. மீன்பிடி தொழில் செய்கிறார். இவரது மருமகன் மணிகண்டன் 30, என்பவருக்கு காலில் புண் இருந்துள்ளது. இதற்காக தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவ.17 ல் சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்துள்ளனர். காலை, இரவு இருவேளை நான்கு நாட்களாக 'ஹாலேபெரிடல்' (Haloperidol) என்ற மாத்திரை சாப்பிட்டார். நவ.21ல் காலை 11:00 மணிக்கு தேவிப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்தவர் பஸ்ஸ்டாண்டில் மயங்கி விழுந்தார். அவரை அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சாப்பிட்ட மாத்திரையை பரிசோதித்த டாக்டர்கள், ஹாலேபெரிடல் என்ற மாத்திரை மன நோயாளிகளுக்கு கொடுப்பது. இதனை சாப்பிட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.எனவே கவனக்குறைவாக செயல்பட்டு தவறான மருந்து, மாத்திரைகளை கொடுத்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரனிடம், தங்கராஜ் புகார் அளித்துள்ளார்.
துணை இயக்குனர் குமர குருபரனிடம் கேட்ட போது, ''அந்த மாத்திரை மன நோயாளிகளுக்கு கொடுப்பது தான். இதை எதற்காக கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரிக்கிறேன். தவறாக கொடுத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X