தமிழ்நாடு

கொள்முதல் மையத்தில் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் வேதனை

Added : நவ 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து கூட்டுறவுத்துறைக்கு நெல் கொள் மையங்கள் மாறிய பிறகும் கூடுதல் கட்டண வசூல் மாறாததால் பாதிக்கப்படுவதாக குலமங்கலம் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மையங்களில் 40 கிலோ நெல் மூடை ஒன்றுக்கு ரூ.50 - ரூ.100 வரை கட்டணம் வசூலிப்பது, குறைந்தளவு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வது போன்ற பிரச்னைகளால் நுகர்பொருள் வாணிப
கொள்முதல் மையத்தில் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் வேதனை

மதுரை : மதுரை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து கூட்டுறவுத்துறைக்கு நெல் கொள் மையங்கள் மாறிய பிறகும் கூடுதல் கட்டண வசூல் மாறாததால் பாதிக்கப்படுவதாக குலமங்கலம் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மையங்களில் 40 கிலோ நெல் மூடை ஒன்றுக்கு ரூ.50 - ரூ.100 வரை கட்டணம் வசூலிப்பது, குறைந்தளவு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வது போன்ற பிரச்னைகளால் நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்த கொள் முதல் மையங்கள் கூட்டுறவுத்துறைக்கு மாற்றப்பட்டது.

கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கொள்மையம் அமைக்கப்பட்டு அந்தந்த கிராமங்களில் நெல் பெறப்பட்டது. அறுவடை முடிந்து ஒரு மாதமாகியும் நிதானமாக நெல் கொள்முதலை துவங்கிய கூட்டுறவுத் துறை பின் விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை.

விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: மையங்களில் நெல்லை விற்றால் ஒரு வாரத்திற்குள் பணப்பட்டுவாடா செய்வர். தற்போது கூட்டுறவுத் துறையிடம் இருந்து பணம் பெற ஒரு மாதமாகிறது. மூடை ஒன்றுக்கு தற்போதும் ரூ.50 வசூலிக்கின்றனர். நெல் எடையிட்ட பின் கையில் கொடுக்கும் ரசீதில் உள்ள தொகையை வங்கியில் செலுத்துவதில்லை. மூடை ஒன்றுக்கு ரூ.8.74 குறைவாக செலுத்துகின்றனர் என்றார்.

கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது: நெல் ஈரப்பதம் பரிசோதித்து தரம் பார்த்து அனுப்புவது எங்கள் பணி. கூடுதல் கட்டணம் வாங்குவதில்லை. ரசீதிற்கும் வங்கியில் செலுத்தும் தொகைக்கும் வித்தியாசம் வர வாய்ப்பில்லை. புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:43:53 IST Report Abuse
J.V. Iyer நல்லது செய்யும் மத்திய அரசுக்கு சரியான முறையால் ஆதரவு அளிக்கவில்லையென்றால் இப்படித்தான். எனக்கென்ன என்று ஒதுங்கி இருக்கும் மக்களுக்கு என்றுதான் புரியுமோ. வோட்டு போடாமல் ஒதுங்கி இருந்தாலும், குற்றத்திற்கு துணை போன்றவர்களே
Rate this:
Cancel
24-நவ-202106:59:22 IST Report Abuse
Krishna Moorthy Krishna Moorthy அனுபவித்து தான் ஆகவேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்களை புரிந்துகொள்ளாமல், தான் சார்ந்த கட்சியின் விளக்கமே சரியானது என கண்மூடித்தனமாக நம்பினால், விவசாயின் வாயில் மண் தான். அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-நவ-202105:03:55 IST Report Abuse
NicoleThomson விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர் அரசு அதிகாரிகளே
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202104:01:55 IST Report Abuse
NicoleThomsonஎங்கே முன்களப்ஸ் போர்வையில் வந்து சிங்கி அடிக்கும் பெருமக்கள், அறிஞர்கல் வாங்க சார் வந்து பாருங்க உங்க ஆட்சியின் அவல நிலையை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X