பொது செய்தி

தமிழ்நாடு

லாபம் தரும் 'தீக்குச்சி' மரங்கள் வளர்க்கலாம்: மதுரை உதவி வனப்பாதுகாவலர் தகவல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை:விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் லாபம் தரும் மலை வேம்பு, 'பீநாரி' என்ற தீக்குச்சி மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டலாம் என மதுரை வேளாண் வன வியல் ஆராய்ச்சி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் இளங்கோ தெரிவித்துள்ளார்.'அய்லாந்தஸ் எக்சல்சா' எனத் தாவரவியல் பெயர் கொண்ட இம்மரம் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது. தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில்

மதுரை:விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் லாபம் தரும் மலை வேம்பு, 'பீநாரி' என்ற தீக்குச்சி மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டலாம் என மதுரை வேளாண் வன வியல் ஆராய்ச்சி கோட்ட உதவி வனப்பாதுகாவலர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
'அய்லாந்தஸ் எக்சல்சா' எனத் தாவரவியல் பெயர் கொண்ட இம்மரம் ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது. தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. மென்மையான மரம் என்பதால் அறுப்பது, சீராக்குவது எளிது. மழை குறைவான, வளமற்ற மண்ணிலும் 20 முதல் 75 ஆண்டுகள் வரை வளரும்.
இந்த மரத்தின் தேவை, வணிகம் குறித்து விவசாயிகள், மக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வு இல்லை. இம்மரம் தீக்குச்சி தவிர பென்சில் மரப்பெட்டி, பிளைவுட் செய்ய பயன்படுகிறது. இளங்கோ கூறியதாவது: மதுரை கேட்டத்தில் மதுரை, துாத்துக்குடி மாவட்டங்களில் இலவசமாக அதிகளவு தீக்குச்சி மரக் கன்றுகள் நட்டு கொடுத்துள்ளோம். 5 ஆண்டுகள் வளர்ந்த பின் மரத்தை வெட்டி தீக்குச்சி, பெட்டி, பொம்மைகள் செய்ய பயன் படுத்தலாம். தீக்குச்சி, மலை வேம்பு மரங்கள் ஒரு டன் ரூ. 5000க்கு மேல் விலை போகும் என்பதால் விவசாயிகள் நட்டு வளர்க்கலாம்.
வனவியல் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இம்மரங்களை இலவசமாக தங்கள் நிலங்களில் நட்டு வளர்க்க மதுரை அவுட் போஸ்ட் கோட்ட அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். மரக் கன்றுகள் கிடைத்த பின் நிலம், மண், தண்ணீரின் தன்மை உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்து நட்டுத் தருவோம். இது போல் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரை தரும் பனை மரங்களையும் விவசாயிகள் வளர்த்து லாபம் பெறலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X