சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தை அச்சுறுத்திய இரும்பு மிதவை அகற்றம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் பாலத்தில் மோதி நேற்றும் அச்சுறுத்திய இரும்பு மிதவையை ராட்சத கிரேன் மூலம் கட்டுமான ஊழியர்கள் அகற்றினர்.பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய இரும்பு மிதவை சூறாவளி, அதிக நீரோட்டத்தால் நவ.22 இரவு 7:00 மணிக்கு நங்கூர கயிறு அறுந்து ரயில் பாலம் துாண் மீது மோதி நின்றது. சிரமத்துடன் மிதவையை பாலத்தில் இருந்து அகற்றினர். ஆனால்
 பாம்பன் பாலத்தை அச்சுறுத்திய  இரும்பு மிதவை அகற்றம்

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் பாலத்தில் மோதி நேற்றும் அச்சுறுத்திய இரும்பு மிதவையை ராட்சத கிரேன் மூலம் கட்டுமான ஊழியர்கள் அகற்றினர்.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய இரும்பு மிதவை சூறாவளி, அதிக நீரோட்டத்தால் நவ.22 இரவு 7:00 மணிக்கு நங்கூர கயிறு அறுந்து ரயில் பாலம் துாண் மீது மோதி நின்றது. சிரமத்துடன் மிதவையை பாலத்தில் இருந்து அகற்றினர். ஆனால் நேற்றும் பாம்பன் கடலில் அதிக நீரோட்டம், சூறாவளி வீசியதால் இரும்பு மிதவை மீண்டும் பாலத்தில் மோதும்நிலை இருந்தது.
இதனையடுத்து மிதவையை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தது. பின் இரும்பு மிதவைக்குள் புகுந்த கடல்நீரை மோட்டார் மூலம் அகற்றி மாலை 5:20 மணிக்கு மிதவையை கிரேனில் துாக்கி, புதிய ரயில் பாலம் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் தற்காலிக சாலையில் வைத்தனர். இதனால் ரயில் பாலத்திற்கு ஏற்பட இருந்த அச்சுறுத்தல் நீங்கியதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X