பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டில் 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள்: இணை கமிஷனர் தகவல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை:நாட்டிலுள்ள 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களை இ-ஷ்ராம் தேசிய தரவு தளத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என மதுரையில் நடந்த 4 மாவட்ட தொழில், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் மேலும் பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் சில உத்தரவுகளை
 நாட்டில் 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள்: இணை கமிஷனர் தகவல்

மதுரை:நாட்டிலுள்ள 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களை இ-ஷ்ராம் தேசிய தரவு தளத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என மதுரையில் நடந்த 4 மாவட்ட தொழில், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. கொரோனா பேரிடரின்போது உண்மையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் சென்றடைய வில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், நிவாரண நிதி வழங்கப்பட்டன. பெரும்பாலான தொழிலாளர்கள் பதிவு செய்யாததால் அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வில்லை. எனவே இ-ஷ்ராம் தேசிய தரவு தளத்தில் உடனடியாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் அருகிலுள்ள இ சேவை மையங்கள் மூலம் இலவசமாக பதிவு செய்யலாம்.
வருமான வரி செலுத்தாத, பி.எப்., இ.எஸ்.ஐ., செலுத்தாத 16 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல்களை பதிவேற்றம் செய்தால் போதும்.மேலும் அனைத்து தொழில், வர்த்தக நிறுவனங்களிலும் பணியாளர்கள் அமர இருக்கை வசதிகளை செய்ய வேண்டும்.தவறுவோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றார். உதவி கமிஷனர்கள் மைவிழிச்செல்வி, காளிதாஸ், கோடீஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X