அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை ‛உஷ்ஷ்ஷ்!': தடுப்பூசி சான்றிதழிலும் போலி!

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று, தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தடுப்பூசி போட பயந்த அரசு ஊழியர்கள், திருப்பதி கோவிலுக்கு செல்வோர், குறுக்கு வழியில் தடுப்பூசி செலுத்தியது போல்,
Corona Vaccine, Fake Certificate, Govt Employees, DMK, BJP, Congress

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று, தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போட பயந்த அரசு ஊழியர்கள், திருப்பதி கோவிலுக்கு செல்வோர், குறுக்கு வழியில் தடுப்பூசி செலுத்தியது போல், சான்றிதழ் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் சிலர் 500 ரூபாய் வாங்கிக் கொண்டு, சம்பந்தப்பட்டோரின் ஆதார் எண்ணை பெற்று, கொரோனா தடுப்பூசி போடாமலே, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வழங்குகின்றனராம். திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த கூத்து அரங்கேறுகிறது. விபரீதத்தை உணர்ந்து, அரசு கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


தி.மு.க.,வுக்கு பா.ஜ., குடைச்சல்!


மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாகவும், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் கோ.தளபதி உள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வழங்கப்படும்' என, குறிப்பிட்டிருந்தார்.

மதுரை மாநகர் பா.ஜ., மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், 'தளபதியின் அறிவிப்பு தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. அதிகாரத்தை தறவாக பயன்படுத்தி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, கட்சி அலுவலகமாக பயன்படுத்துகிறார்' என, கலெக்டர் அனீஷ் சேகரிடம் புகார் அளித்தார். அதோடு நிற்காமல், மாநில தேர்தல் ஆணையர், சபாநாயகருக்கு எல்லாம் புகார் அனுப்பி, அவரது எம்.எல்.ஏ., பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அணுகுண்டையும் வீசினார்.

'இது என்ன வம்பா போச்சே' என கருதிய தளபதி எம்.எல்.ஏ., அலறியடித்து, 'கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும்' என, மற்றொரு அறிக்கையை வெளியிட்டு பெருமூச்சு விட்டுள்ளார். தி.மு.க.,வுக்கு பா.ஜ., கொடுக்கும் குடைச்சல் உள்ளாட்சித் தேர்தல் வாயிலாக துவங்கி விட்டது போலும்.


latest tamil news
காங்.,கை காப்பாற்றுவாரா காந்தி?


மஹாராஷ்டிரா மாநிலம், வார்தா மாவட்டத்தில் உள்ள, காந்தி தங்கிய சேவா கிராம ஆசிரமத்தில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில் காந்திய பயிலரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையில், மாநில நிர்வாகிகள் சிலர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். காந்தி, காங்கிரஸ், சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டன.

காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தேவபிரசாத் ராய், சச்சின் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் கவுடா பங்கேற்று பேசினர். அங்கு நடந்த பயிலங்கத்தை போலவே, தமிழகத்தில் மண்டல, மாவட்ட, வட்டார வாரியாக நடத்த வேண்டும். அதில் மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உத்தரவிட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் காந்திய பயிலரங்கம் நடத்தி, உள்ளாட்சி தேர்தல் பிரசாரமும் மேற்கொள்ள, தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202118:02:26 IST Report Abuse
sankaseshan PM ஐ விமர்சிக்க தகுதி இல்லை
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
24-நவ-202120:57:09 IST Report Abuse
M S RAGHUNATHAN Because of such fradulent instances, most of the certificates issued either by union government or state governments are recognised in western countries. Every person is viewed suspiciously now a days.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-நவ-202120:31:16 IST Report Abuse
Visu Iyer அப்போ அந்த தடுப்பூசி எல்லாம் எங்கே போயிருக்கும்..? அதை கண்டு பிடிக்க ஒரு தனிப்படை அமைப்பாங்களா மோடி ஒரு கோடி என்று பெருமை அடித்தது எல்லாம் போலி.. தானே .. உங்கள் கையில் உள்ள சர்டிபிகேட் போலியா என்று கண்டு பிடிக்க ஒரு ஆப் ஒன்றை பிரதமர் தொடங்கி வைப்பார்ன்னு சொல்லுங்க .. அவுங்க விளையாடறாங்க .. இவுங்க பந்து போட"றாங்க.. (கா)"
Rate this:
24-நவ-202123:01:47 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuஇது dmk ஆட்சியில் தமிழ் நாட்டில் விசு!!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X