பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டுமா எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர். ஒரு மாதமாக நீர்ப்பிடிப்பில் மழை பெய்வதும் பின் குறைவதுமாக உள்ளது. அக். 25ல் துவங்கிய கனமழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பிருந்தும், அணை நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) அமல்படுத்தி கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றியதால்

கூடலூர்:பெரியாறு அணை நீர்பிடிப்பில் அவ்வப்போது பெய்யும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

ஒரு மாதமாக நீர்ப்பிடிப்பில் மழை பெய்வதும் பின் குறைவதுமாக உள்ளது. அக். 25ல் துவங்கிய கனமழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்பிருந்தும், அணை நீர்மட்ட கால அட்டவணை (ரூல் கர்வ்) அமல்படுத்தி கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றியதால் நீர்மட்டத்தை அந்த நேரத்தில் உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.


எதிர்பார்ப்பு

நவ. 30 ல் ரூல் கர்வ் முறைப்படி நீர்மட்டம் 142 அடியாக தேக்கலாம். சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி பெரியாறில் 9.2 மி.மீ., தேக்கடியில் 12.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1862 கன அடியாக இருந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 2264 கனஅடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1867 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7491 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் சற்று உயர்ந்து 141.40 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).

நீர்மட்டம் உயர்வதன் அடிப்படையில் கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அக். 29 ல் கேரளாவுக்கு 2950 கனஅடி வெளியேற்றப்பட்டு நவ. 6ல் நிறுத்தப் பட்டது அதன் பின் நவ. 17ல் இரண்டாவது முறையாக 781 கனஅடி வெளியேற்றி நவ. 22ல் நிறுத்தப்பட்டது. நேற்று மூன்றாவது முறையாக 3 -வது ஷட்டர் மூலம் 397 கன அடி நீர் கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X