பொது செய்தி

தமிழ்நாடு

சாடிவயலுக்கு மீண்டும் வந்தது மப்சல் பஸ்!

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஆலாந்துறை:தினமலர் செய்தி எதிரொலியாக, சாடிவயல் பகுதிக்கு, மீண்டும் மப்சல் பஸ் இயக்கப்பட்டுள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சாடிவயல் கிராமம் உள்ளது. இப்பகுதி ஒட்டி, வனப்பகுதிக்குள், சீங்கப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரத்தி, ஜாகிர் போரத்தி உள்ளிட்ட மலை கிராமங்கலும் உள்ளன.இப்பகுதியில் கோவையின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம்
 சாடிவயலுக்கு மீண்டும் வந்தது மப்சல் பஸ்!

ஆலாந்துறை:தினமலர் செய்தி எதிரொலியாக, சாடிவயல் பகுதிக்கு, மீண்டும் மப்சல் பஸ் இயக்கப்பட்டுள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சாடிவயல் கிராமம் உள்ளது. இப்பகுதி ஒட்டி, வனப்பகுதிக்குள், சீங்கப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரத்தி, ஜாகிர் போரத்தி உள்ளிட்ட மலை கிராமங்கலும் உள்ளன.இப்பகுதியில் கோவையின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியும் உள்ளது. இதனால், சாடிவயல் பகுதிக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.போக்குவரத்து கழகம் சார்பில், காந்திபுரத்தில் இருந்து சாடிவயல் வரையும், காந்திபுரத்தில் இருந்து சிறுவாணி வரையும் என, 2 'மப்சல்' பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. காந்திபுரத்தில் இருந்து சாடிவயல் வரை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த மப்சல் பஸ்சை, திடீரென நிறுத்தி, அதற்கு பதிலாக, ரெட் பஸ் எனப்படும் சொகுசு பஸ் இயக்கப்பட்டது.பழைய மப்சல் பஸ்சில், சாடிவயலில் இருந்து காந்திபுரம் செல்ல, 25 ரூபாய் டிக்கெட் கட்டணம் இருந்த நிலையில், ரெட் பஸ்சில், 39 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ரெட் பஸ் இயக்கியதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, காந்திபுரத்தில் இருந்து சாடிவயல் பகுதிக்கு, மீண்டும் மப்சல் பஸ் இயக்கப்பட்டுள்ளது. இதனால், சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X