சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நத்தம் அருகே கோஷ்டி மோதல் 13 பேர் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
நத்தம்:நத்தம் அருகே கோயிலில் மரியாதை செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.நத்தம் அருகே மூங்கில்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரு தரப்பினர் தங்களுக்கும் கோயிலில் மரியாதை வேண்டும் என கேட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர், 'ஊர் பாரம்பரிய செயல்பாட்டை மாற்ற முடியாது' எனக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக

நத்தம்:நத்தம் அருகே கோயிலில் மரியாதை செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் அருகே மூங்கில்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரு தரப்பினர் தங்களுக்கும் கோயிலில் மரியாதை வேண்டும் என கேட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர், 'ஊர் பாரம்பரிய செயல்பாட்டை மாற்ற முடியாது' எனக் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு சத்தியராஜ் 28, தரப்பினருக்கும், வேல்முருகன் 40, தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கினர். அப்பகுதி போர்க்களம் போல் மாறியது.எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி., அருண்கபிலன், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாண்டியன் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இருதரப்பிலும் சத்தியராஜ், சுப்பிரமணி 47, பாண்டியராஜன் 38, மணிராஜா 26, ராஜீவ்காந்தி 43, சரவணன் 24, மோகன்ராஜ் 23, வேல்முருகன் 40, வேணுகோபால் 18, வீரபாகு 37, மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்தனர். மொத்தம் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலரை தேடி வருகின்றனர். பதற்றமாக இருப்பதால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X