பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு தயாரிப்பு பணி 'விறுவிறு': பள்ளிகளில் மாணவர் விபரம் சேகரிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களை சேகரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, கடந்த செப்., மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டன. பாடத்திட்டம், குறைக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்வுத்துறை, கவனம் செலுத்த துவங்கி விட்டது. பத்தாம் வகுப்பு,

கோவை:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களை சேகரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, கடந்த செப்., மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டன. பாடத்திட்டம், குறைக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்வுத்துறை, கவனம் செலுத்த துவங்கி விட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி உள்ளிட்ட, 12 வகையான தகவல் சேகரிக்க, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு, நடப்பாண்டில் இருந்து, மதிப்பெண் சான்றிதழில், பயிற்றுமொழி குறிப்பிடப்படவுள்ளதால், ஒன்றாம் வகுப்பில் இருந்து மாணவர்களின் பயிற்றுமொழி குறித்த தகவல்களையும், புதிதாக இணைக்க வேண்டும்.இப்பணிகள், இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட வாரியாக, நன்கு தொழில்நுட்பம் அறிந்த, கணினி பயிற்றுநர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மூலம் மாணவர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து, இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான ஆயத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதற்காக மாணவர்களின் தகவல்களை, பிழையின்றி சேகரித்து அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X