பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக, உற்பத்தியை அதிகரிக்கும்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் 'ஓபெக்'அமைப்பிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இதை ஏற்க ஓபெக் மற்றும் அதன் நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. இதையடுத்து விலையை குறைப்பதற்கு ஏதுவாக, தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா

புதுடில்லி:சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக, உற்பத்தியை அதிகரிக்கும்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் 'ஓபெக்'அமைப்பிடம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இதை ஏற்க ஓபெக் மற்றும் அதன் நட்பு நாடுகள் மறுத்துவிட்டன.
இதையடுத்து விலையை குறைப்பதற்கு ஏதுவாக, தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்கும்படி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.இந்தியாவும், அதிகளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அதிகாரி கூறியதாவது:அவசர கால தேவைக்காக கையிருப்பில் வைத்துள்ள கச்சா எண்ணெயில் இருந்து 50 லட்சம் பீப்பாய்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று இடங்களில் நிலத்திற்கு கீழே 3.8 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேகரித்து வைக்கப் பட்டு உள்ளது.அதிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அடுத்த 10 நாட்களுக்குள் விடுவிக்கப்படும். இவை இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பைப் மூலம் இணைக்கப்பட்டு உள்ள, மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரடியாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X