தமிழ்நாடு

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே ரூ.4,000 கோடியில் மெட்ரோ ரயில் பாதை

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, 4,000 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், 15.4 கி.மீ., பாதையில், மொத்தம் 12 நிலையங்கள் அமைக்கும் பணியை மூன்று ஆண்டுகளில் முடிக்க முடியும் என, வரைவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில், விமான நிலையம் - விம்கோநகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, 4,000 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், 15.4 கி.மீ., பாதையில், மொத்தம் 12 நிலையங்கள் அமைக்கும் பணியை மூன்று ஆண்டுகளில் முடிக்க முடியும் என, வரைவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில், விமான நிலையம் - விம்கோநகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினமும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.



latest tamil news




கோரிக்கை


மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில்,118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, பல இடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில்,முதல் கட்டமாக, மாதவரம் பால்பண்ணை - சி.எம்.பி.டி., மற்றும் மாதவரம் பால்பண்ணை - தரமணி இணைப்பு சாலை இடையே, 52.01 கி.மீ., பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அதே போல், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே, 26.01 கி.மீ., மெட்ரோ பாதை பணிகளை முடிக்க துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், மெட்ரோ பாதை விரிவாக்க திட்டத்தில், விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.


விரிவான அறிக்கை


அதன் படி, அப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் செல்வோரும், தென்மாவட்டங்களில் இருந்து பஸ்களில் வந்திறங்கும் பயணியர், கிளாம்பாக்கத்திலிருந்து, சென்னைக்குள் நுழையவும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பாதையில் உள்ள பகுதிவாசிகளுக்கும் பயனளிக்கும். இக்கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறு குறித்து ஆராயப்பட்டது.

இது தொடர்பான வரைவு திட்ட அறிக்கை, ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனத்தால், தயாரிக்கப்பட்டுள்ளது.அதில், பணி துவங்கும் காலத்திலிருந்து, மூன்று ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, மெட்ரோ ரயில் சேவையை துவங்க முடியும் என கூறப்பட்டு உள்ளது. 10 மாதங்களுக்கு முன்பே, வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அதை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதில், மெட்ரோ நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

வரைவு திட்ட அறிக்கையில் உள்ள சாதக - பாதகங்களை ஆராய்ந்து, விரிவான முழு திட்ட அறிக்கை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதலுடன் பணிகள் துவங்கினால், விரைவில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்க வாய்ப்பிருப்பதாக, மெட்ரோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வரைவு திட்ட அறிக்கையில் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை, நிலையங்களுக்கு இடையிலான துாரம், மேம்பால பாதையின் உயரம், நிலையங்களில் அமைவிடம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நிலையங்களின் அமைவிடம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. எனினும், நிலைய அமைவிடங்களை தேர்வு செய்து இறுதி செய்வது, அதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து ஆலோசிக்கிறோம். விரிவான ஆலோசனைக்குப் பின், இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நிறைவான திட்ட அறிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக பணிகள் துவங்கப்படும். - மெட்ரோ நிறுவன அதிகாரிகள்.


latest tamil news




தகவல் அறியும் சட்டத்தில் பதில்


சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்தகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தின் நிலை குறித்து கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து, வரைவு திட்ட அறிக்கை தனியார் நிறுவனத்தால், ஜனவரி, 26ல் சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வரைவு திட்ட அறிக்கையின் படி, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, 15.4 கி.மீ., பாதையில், மொத்தம், 12 நிலையங்கள் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட நிலையங்கள், 8 மீட்டரில் இருந்து, 15 மீட்டர் உயரம் வரை மாறுபடும். இத்திட்டத்துக்கு, 4,000 கோடி ரூபாய் செலவாகும். திட்டம் துவங்கும் நாள் முதல், அடுத்த மூன்று ஆண்டுகளில் முழு பணிகளையும் முடிக்கலாம்.

இப்பாதை, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இடது பக்கம் அமைக்கலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்த வரைவு திட்ட அறிக்கையை, மெட்ரோ நிர்வாகம், தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவதில் சற்று காலதாமதம் ஆகியுள்ளதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
24-நவ-202117:22:08 IST Report Abuse
Rajagopal அருமையான வழிப்பாதை. இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும். செங்கல்பட்டு வரை நீட்டித்தால் அது அற்புதமாக இருக்கும்.
Rate this:
Cancel
24-நவ-202116:47:18 IST Report Abuse
சாம் அடுத்த ஊழல் ரெடி... கொண்டாட்டம் தான்....
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
24-நவ-202116:04:01 IST Report Abuse
Ramanathan Muthiah 10 மாதங்களுக்கு முன்பே, வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அதை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதில், மெட்ரோ நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. என்ன நடைமுறை சிக்கல் ??? அதாவது, இங்குள்ள திராவிட கும்பலின் சொத்துக்கள் இடிப்பிடியும் போல ?? - இப்பாதை, விமான நிலையத்தில் கிளாம்பாக்கம் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் இடது பக்கம் அமைக்கலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இடது பக்கத்தில் தான் இவர்களின் அணைத்து கொள்ளை அடித்த சொத்துக்களும் இருக்கிறது என்று நினைக்கிறன் அதாவது புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள இடங்கள் அல்லது கடைகள், கிரோம்பேட்டை சுரங்க ரயில் பாதையே இப்போதான் வேலை நடக்கிறது...மக்களே புரிந்துகொள்ளலாம் இரு திராவிட கும்பலின் அட்டூழியங்கள். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X