பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பு துளியும் இல்லாமல் சும்மா கிடக்கு அம்மா பூங்கா!

Added : நவ 24, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:வெள்ளிமலைபட்டினத்தில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.வெள்ளிமலைபட்டிணம் ஊராட்சியில், நரசீபுரம் சாலையோரத்தில் உள்ள ரிசர்வ் சைட்டில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.பூங்கா

தொண்டாமுத்தூர்:வெள்ளிமலைபட்டினத்தில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.வெள்ளிமலைபட்டிணம் ஊராட்சியில், நரசீபுரம் சாலையோரத்தில் உள்ள ரிசர்வ் சைட்டில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்ட பின், சில நாட்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் இருந்து. அதன்பின், தற்போதுவரை, பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.இதனால், பூங்காவில் உள்ள அழகு செடிகளுடன், புதர்களும் நிறைந்துள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி உபகரணங்களும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.எனவே, பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை, பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X