சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல் கடத்திய லாரி பறிமுதல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:வனத்துறை ஜீப் மீது மோதி விபத்து ஏற்படுத்திய செங்கல் கடத்தல் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வனச்சரகத்தின் வனவர், அருண்சிங் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கோவை அருகே உள்ள கணுவாய் பஸ்ஸ்டாண்டில் வனத்துறை ஜீப்பை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, ஐகோர்ட் உத்தரவை மீறி, செங்கல் கடத்தி சென்ற லாரி, வனத்துறை ஜீப் மீது மோதியது. இச்சம்பவத்தில்,
 செங்கல் கடத்திய லாரி பறிமுதல்

பெ.நா.பாளையம்:வனத்துறை ஜீப் மீது மோதி விபத்து ஏற்படுத்திய செங்கல் கடத்தல் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வனச்சரகத்தின் வனவர், அருண்சிங் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கோவை அருகே உள்ள கணுவாய் பஸ்ஸ்டாண்டில் வனத்துறை ஜீப்பை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, ஐகோர்ட் உத்தரவை மீறி, செங்கல் கடத்தி சென்ற லாரி, வனத்துறை ஜீப் மீது மோதியது. இச்சம்பவத்தில், ஜீப் பின்பகுதி நொறுங்கியது.இது குறித்து, வனவர் அருண்சிங், தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.செங்கல் சூளை உரிமையாளர் அருண், லாரி உரிமையாளர் தமிழரசன், லாரி டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X