புதுடில்லி :மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் 'நிடி ஆயோக்' அமைப்பு, எஸ்.டி.ஜி., எனும் ஸ்திரமான வளர்ச்சி இலக்கை நோக்கி நடைபோடும் நகரங்கள் குறித்த குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், சிம்லா, கோயம்புத்துார் சண்டிகர் ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன.
இந்திய-ஜெர்மனி மேம்பாட்டு கழகத்தின் கூட்டுறவுடன் உருவாக்கப்பட்ட எஸ்.டி.ஜி., 2030ம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கை எட்டுவதற்காக, நகரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை மதிப்பீடு செய்து குறியீட்டை வழங்குகிறது. இந்நிலையில், நிடிஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எஸ்.டி.ஜி., செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
![]()
|
வேகமான வளர்ச்சியின் இன்ஜின்களாக நகரங்கள் விளங்குகின்றன. எஸ்.டி.ஜி., நகர்ப்புற குறியீடு, நிடி ஆயோக் மற்றும் ஜெர்மனியின் கூட்டுறவுடன் துவங்கப்பட்டுள்ளது. இது, நகரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கும் ஒரு மைல்கல் திட்டமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.நடப்பு 2021 - 22ம் ஆண்டில் எஸ்.டி.ஜி., நகர்புற குறியீட்டில் இடம் பெற்றுள்ள 56 நகரங்களில் 'டாப்' 10 இடங்களை சிம்லா, கோவை, சண்டிகர், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, புனே, திருச்சி, ஆமதாபாத், நாக்பூர் ஆகியவை பிடித்துள்ளன. இக்குறியீட்டில் கடைசி 10 இடங்களில் தன்பாத், மீரட், இடாநகர், கவுஹாத்தி, பாட்னா, ஜோத்பூர், கோஹிமா, ஆக்ரா, கோல்கட்டா, பரிதாபாத் ஆகியவை உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE