மதுரை ஐகோர்ட் உத்தரவு: உச்ச நீதிமன்றம் ரத்து

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:விவசாய கடன்கள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழகத்தில்2016ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதியாக 'ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்று

புதுடில்லி:விவசாய கடன்கள் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழகத்தில்2016ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதியாக 'ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. இதன்பின் 2016 மே 25ல் மாநில கூட்டுறவுத்துறை சார்பில் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விவசாய சங்கம் ஒன்று சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்ளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை 'கடன் தள்ளுபடி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்' என கடந்த 2017ல் உத்தரவிட்டது. மேலும் மூன்று மாதத்துக்குள் இந்த உத்தரவை நிறைவேற்றவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 'விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

தமிழக அரசு கடந்த 2016ல் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி தான் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X