சிறப்பு நீதிமன்ற கோரிக்கை நிராகரித்த தலைமை நீதிபதி

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தில் 'என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு வழக்குகளை விசாரிக்க, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் தேவையில்லை' என அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறி உள்ளார்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒருவர் 'ஜாமின்' மனு தாக்கல் செய்தார். பண மதிப்பிழப்பு

ஆமதாபாத்:குஜராத்தில் 'என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு வழக்குகளை விசாரிக்க, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் தேவையில்லை' என அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறி உள்ளார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒருவர் 'ஜாமின்' மனு தாக்கல் செய்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து கள்ள நோட்டுகள் அச்சடித்த வழக்கில், அவர் ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு சாட்சியை மட்டுமே என்.ஐ.ஏ., ஆஜர்படுத்தி உள்ளது. மேலும் 47 பேர் சாட்சியம் அளிக்க வேண்டியதால் விசாரணை தாமதமாகும் என கூறி ஜாமின் வழங்கும்படி கோரப்பட்டது.சிறப்பு நீதிமன்றம் ஜாமினை மறுத்ததை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'என்.ஐ.ஏ., வழக்கு விசாரணை தாமதம் ஆவதால், கைதானவர்கள் நீண்ட நாள் சிறையில் இருக்கும் நிலை உள்ளது. எனவே மேலும் இரு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி 'என்.ஐ.ஏ.,வின் 12 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மேலும் இரு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுவதால், கூடுதல் நீதிமன்றம் அமைக்க பரிந்துரைப்பது அவசியமற்றது' என கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X