மாவட்ட செஸ்; அபாரமாக காய் நகர்த்திய சிறுவர், சிறுமியர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:'சில்ட்ரன் செஸ் போரம்' சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கோவை 'ராயல் டவரில்' நேற்று நடந்தது.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 9,11,13,15, 15+, ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.ஒன்பது வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மிதுன், 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வைஷ்ணவி, 13 வயதுக்குட்பட்டோருக்கான

கோவை:'சில்ட்ரன் செஸ் போரம்' சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கோவை 'ராயல் டவரில்' நேற்று நடந்தது.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 9,11,13,15, 15+, ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.ஒன்பது வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மிதுன், 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வைஷ்ணவி, 13 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சுகிர்தா, 15 வயதிற்குட்பட்ட பிரிவில் தேஜஸ்வி, மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆகாஷ் ஆகியோரும், அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்க, பரிசு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜயராகவன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X