வங்கி கடன் மோசடியாளர்களை விட்டுவிட மாட்டோம்: நிர்மலா

Added : நவ 24, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஜம்மு :''வங்கியில் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வோம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர்
வங்கி கடன் மோசடியாளர்களை  விட்டுவிட மாட்டோம்: நிர்மலா

ஜம்மு :''வங்கியில் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வோம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியில் மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது.


ஜம்மு காஷ்மீரின், ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர், வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து பணத்தை பறிமுதல் செய்வோம் என்றார். பாஜ ஆட்சி வருவதற்கு முன், தேசிய வங்கிகளில் பலருக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. அவர்களில் பலர் பணத்தை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைவுப்படுத்தி பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள். கடனை திருப்பி செலுத்தாமல் தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

latest tamil news




மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன் தேசிய வங்கிகள் வாயிலாக பலருக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். ஆனால் அவர்களை சுதந்திரமாக திரிய மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. வங்கியின் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை விரைவாக விசாரித்து அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை இந்தியா வுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொடுத்த கடன் மீண்டும் வசூலிக்கப்படும் என்பது நுாறு சதவீதம் நிச்சயம்.கடனை திருப்பி செலுத்தாமல் வெ ளிநாடுகளுக்கு தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-நவ-202114:25:58 IST Report Abuse
vpurushothaman விட்டு விட மாட்டோம். வெளிநாட்டிற்குத் தப்பி விடச் செய்வோம். ஓடிப்போனவர்கள் இன்னமும் ஜோராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-202113:27:18 IST Report Abuse
Sampath Kumar இப்ப படிப்புக்கு கூட வரி போட்ட தாராள மனசு யாருகிவரும்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
24-நவ-202111:36:21 IST Report Abuse
பாமரன் மோடி...அட அமித் சேட் பற்றிக்கூட சொல்லலாம்... ஆனால் இந்தம்மாவை பற்றி எழுதினால் தெய்வகுத்தமா பார்க்கப்பட்டு... இவரோட ஸ்டேட்மெண்டை சுதந்திர மற்றும் குடியரசு தின விழாவில் சம்பிரதாயமான சொல்லப்படும் ""இந்தியா வல்லரசாகும்"" லெவலில் தான் பார்க்கணும்.. வேறென்ன சொல்ல..??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X