வங்கி கடன் மோசடியாளர்களை விட்டுவிட மாட்டோம்: நிர்மலா| Dinamalar

வங்கி கடன் மோசடியாளர்களை விட்டுவிட மாட்டோம்: நிர்மலா

Added : நவ 24, 2021 | கருத்துகள் (18)
Share
ஜம்மு :''வங்கியில் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வோம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர்
வங்கி கடன் மோசடியாளர்களை  விட்டுவிட மாட்டோம்: நிர்மலா

ஜம்மு :''வங்கியில் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தவர்களை சுதந்திரமாக திரிய விட்டுவிட மாட்டோம். அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வோம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சியில் மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது.


latest tamil news



மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன் தேசிய வங்கிகள் வாயிலாக பலருக்கு கோடிக் கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். ஆனால் அவர்களை சுதந்திரமாக திரிய மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. வங்கியின் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் மீதான வழக்கை விரைவாக விசாரித்து அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை இந்தியா வுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொடுத்த கடன் மீண்டும் வசூலிக்கப்படும் என்பது நுாறு சதவீதம் நிச்சயம்.கடனை திருப்பி செலுத்தாமல் வெ ளிநாடுகளுக்கு தப்பித்தவர்களின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X