புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.அதன்பின், செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். திரிபுராவில் நடந்த வன்முறையில், பா.ஜ., தொண்டர்களால் திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து பிரதமரிடம் முறையிட்டேன்.

மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினேன். நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பு குலைக்கப்படக் கூடாது என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டால் செய்ய தயார். வரும் 30ம் தேதி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை மும்பையில் சந்திக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE