மாநில அளவிலான கபடி போட்டி:கற்பகம் பல்கலைக்கழக அணி 'கில்லி'

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:திருப்பூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பிடித்தது.திருப்பூர், தளவாய் பட்டினம் பகுதியில் நடந்த மாநில அளவிலான, 'ஓபன்' கபடி 'சாம்பியன்ஷிப்' போட்டியில், தமிழகம் முழுவதுமிருந்து, 110 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் அபாரமாக விளையாடி, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.முதல் சுற்றில்

கோவை:திருப்பூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பிடித்தது.திருப்பூர், தளவாய் பட்டினம் பகுதியில் நடந்த மாநில அளவிலான, 'ஓபன்' கபடி 'சாம்பியன்ஷிப்' போட்டியில், தமிழகம் முழுவதுமிருந்து, 110 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் அபாரமாக விளையாடி, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.முதல் சுற்றில் இருந்தே திறமையாக விளையாடிய கற்பகம் அணி, கால் இறுதி சுற்றில் திண்டுக்கல் மாவட்ட அணியை, 7----22 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.அரை இறுதியிலும் சிறப்பாக விளையாடி, 14--23 என்ற புள்ளி கணக்கில், 'தாராபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப்' அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதி போட்டியில் கற்பகம் அணியும், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16--32 என்ற புள்ளி கணக்கில், எதிர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக அணி. கற்பகம் அணியின் அஜித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.வெற்றி பெற்ற அணி வீரர்களை, கற்பகம் நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் சுடலைமுத்து, பதிவாளர் பழனிசாமி மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X