காந்திபுரத்தில் 'டிவைடர்' மறைப்பால் பயணிகள் அவதி: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே, பாலத்துக்கு கீழுள்ள பகுதியை கடக்க முடியாமல், 'டிவைடர்' வைத்து போலீசார் மறித்திருப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.கோவையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.நகரில் உள்ள பிரதான சாலைகளில் பாலங்கள் கட்டுமான பணி நடப்பதால், போக்குவரத்து
 காந்திபுரத்தில் 'டிவைடர்' மறைப்பால் பயணிகள் அவதி: சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

கோவை:காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே, பாலத்துக்கு கீழுள்ள பகுதியை கடக்க முடியாமல், 'டிவைடர்' வைத்து போலீசார் மறித்திருப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.கோவையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.நகரில் உள்ள பிரதான சாலைகளில் பாலங்கள் கட்டுமான பணி நடப்பதால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது.இச்சூழலில், தேவையில்லாத இடங்களில், 'டிவைடர்'களால் மறைப்பு ஏற்படுத்தி, மேலும் போக்குவரத்து சிக்கலை போலீசார் உருவாக்கி வருகின்றனர்.இதற்கு உதாரணமாக, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சொல்லலாம். காந்திபுரம் சிக்னலில் இருந்து மத்திய சிறை நுழைவாயில் வரை, ரோடு விசாலமாக இருக்கிறது.ஆனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்லும் பஸ்கள், வாயிலை கடக்கும்போது, எறும்புபோல் ஊர்ந்து செல்கின்றன.பயணிகளை ஏற்றுவதற்காக ஒரே நேரத்தில், மூன்று பஸ்கள் பக்கவாட்டில் நிறுத்தப்படுகின்றன. ரோட்டை ஆக்கிரமித்து பூக்கடைகள் நடத்தப்படுகின்றன. பயணிகளால் லக்கேஜ்களுடன் ரோட்டோரம் நடந்து செல்ல முடிவதில்லை.டிவைடரால் மறைப்பு போதாதுஇதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத போலீசார், பஸ் ஸ்டாண்ட் வாயில் எதிரே பயணிகள் கடக்க, பாலத்துக்கு கீழ் மையப்பகுதியில் விடப்பட்டிருந்த இடைவெளியை, 'டிவைடர்'கள் வைத்து மறைத்திருக்கின்றனர்.கல்லுாரி மாணவ, மாணவியர், இளம்பெண்கள் சிலர் டிவைடர்களுக்கு இடையே நுழைந்து மிகவும் கஷ்டப்பட்டு செல்கின்றனர்.லக்கேஜ்களுடன் டவுன் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கும் பயணிகள், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு கடந்து செல்லவும், அங்கிருந்து இங்கு வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.இரு பகுதியிலும், ரோட்டோரத்தில் சாலையோர வியாபாரிகளால் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின், பஸ்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. நடைபாதையில் செல்ல முடியாமல் கடைக்காரர்கள் பொருட்களை அடுக்கி வைத்து ஆக்கிரமித்திருக்கின்றனர்.இதேபோல், வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் 'யூ' டேர்ன் அடிக்க முடிவதில்லை. காந்திபுரம் சிக்னலில் காத்திருந்து, திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.இது, தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்துவதோடு, சிக்னலில் எந்நேரமும் ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். நெரிசலின்றி செல்ல போக்குவரத்தை எளிமைப்படுத்தாமல், 'டிவைடர்' அமைத்ததால், மக்களுக்கே சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X