பொது செய்தி

தமிழ்நாடு

'மோடி மகள்' திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு உதவி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை;'மோடி மகள்' திட்டத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தந்தையை இழந்த, 30 பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை வழங்கினர்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பெண்களின் வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியமானது. தந்தை இறந்து விட்டால், ஏழ்மையான
 'மோடி மகள்' திட்டத்தில்  பெண் குழந்தைகளுக்கு உதவி

கோவை;'மோடி மகள்' திட்டத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தந்தையை இழந்த, 30 பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை வழங்கினர்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பெண்களின் வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியமானது. தந்தை இறந்து விட்டால், ஏழ்மையான குடும்பங்களில் பெண் குழந்தைகளின் கல்விதான் அதிகம் பாதிக்கப்படுகிறது. அது தடைபடக்கூடாது என்பதற்காக, 'மோடி மகள்' திட்டத்தை துவங்கி இருக்கிறேன்.இந்த திட்டத்தின் மூலம் ஐந்து முதல், 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகையாக ஒரு குழந்தைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 30 குழந்தைகளுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில், 100 பெண் குழந்தைகள் பயனடைந்து உள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X