அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 'மெகா ஜவுளி பூங்கா!' அமைச்சர்கள் தலைமையில் கோவையில் ஆலோசனை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் (சிட்ரா) அரங்கில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமையில், தமிழ்நாட்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 415 கோடி ருபாய் செலவில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறையினர் பேசியதாவது:பிரபு தாமோதரன்,
 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 'மெகா ஜவுளி பூங்கா!'  அமைச்சர்கள் தலைமையில் கோவையில் ஆலோசனை

கோவை:கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தின் (சிட்ரா) அரங்கில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தலைமையில், தமிழ்நாட்டில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 415 கோடி ருபாய் செலவில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறையினர் பேசியதாவது:பிரபு தாமோதரன், கன்வீனர், டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு:

சர்வதேச அளவில் மாறி வரும் பொருளாதார நிலையில், அரசுகள் பெரிய அளவிலான உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.ஏற்றுமதிக்கான சந்தை மிகவும் விரிவடைந்துள்ளது. தேவையும் அதிகரித்து வருவதால், ஒரே இடத்தில் பெரும் ஜவுளித் தொழிற்சாலைகள் தேவையாக உள்ளன.பெரிய அளவிலான ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன், அதற்கான முன்மாதிரி படிவம் ஒன்றை வடிவமைப்பது அவசியம்.இந்த பூங்காவில் எத்தகைய துணி ரகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும், அதற்கான வசதிகள், அதிக விலை மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்தியும் அவசியமாகிறது.தொழில்நுட்ப ரீதியாக அணுகவும், சர்வதேச தரத்தில் இது அமையவும் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமிப்பது முக்கியம். சர்வதேச அளவில் உள்ள சுற்றுச் சூழல் சமுதாய நிதி நடைமுறைகளை பெறவும் முயற்சிக்கலாம்.தற்போதுள்ள ஸ்பின்னிங் மில்கள், பல விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் இவற்றின் கொள்திறன் இரட்டிப்பாகும். அதற்கு ஏற்ற மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை வேண்டும்.ரவிசாம், தலைவர், தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா):

ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ஸ்பிண்டில்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப, தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து, பருத்தி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்தில்குமரன், இணை செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்:

திருப்பூரில் முழுவதும் பருத்தியிலான ஆடைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால், செயற்கை இழை கலந்த ஆயத்த ஆடைகளுக்குத்தான் எதிர்காலம் உள்ளது. துணியை பதனிடுதலில் இன்னும் நாம் பலவீனமாகவே உள்ளோம். இதை பலப்படுத்தும் வகையில், புதிய திட்டங்கள் அமைய வேண்டும்.'மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது'நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் தேவைக்கும் குறைவாகவே மின் உற்பத்தி உள்ளது. புதிய திட்டங்களால் தான் மின் உற்பத்தியை பெருக்க முடியும். கடந்த காலங்களில் தேவைக்கு ஏற்ப, வெளிமாநிலங்களில் மின்சாரத்தை பெற்று பயன்படுத்தி வந்தோம்.அடுத்து வரும் ஆண்டுகளில் மின்சாரத்தின் தேவைக்கு ஏற்ப, உற்பத்தி உயரும். மின்வாரியத்தின் கடனுக்கான வட்டியை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசுகையில், " ஒரு திட்டத்தை துவக்கும்போது, அது தொடர்பான ஆலோசனைகளை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தொழில் துறையினரின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X