வகுப்பறைதோறும் புகார் பெட்டி! மாணவியர் தற்கொலை தடுக்க ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்பறைதோறும் புகார் பெட்டி! மாணவியர் தற்கொலை தடுக்க ஆலோசனை

Added : நவ 24, 2021
Share
கோவை:சமூக செயற்பாட்டாளர்களை உறுப்பினர்களாக கொண்டு, பள்ளிதோறும் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் தனியார் பள்ளி மாணவி, ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்த, விசாரணை கூட முடியாத நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, தனியார் பள்ளி மாணவி,

கோவை:சமூக செயற்பாட்டாளர்களை உறுப்பினர்களாக கொண்டு, பள்ளிதோறும் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் தனியார் பள்ளி மாணவி, ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்த, விசாரணை கூட முடியாத நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, தனியார் பள்ளி மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக, கடிதம் எழுதி வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.அடுத்தடுத்து மாணவிகள் இருவர், தற்கொலை செய்து கொண்ட பிறகும், கல்வித்துறை மவுனம் சாதிக்காமல், விழிப்புணர்வு பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென்ற, குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கிவிட்டன.குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க வேண்டுமென்ற, உத்தரவு உள்ளது. ஆனால், இப்பெட்டி பெரும்பாலும், தலைமையாசிரியர் அறைக்கு அருகிலோ அல்லது, ஆசிரியர்கள் அறைக்கு அருகிலோ இருப்பதால், மாணவர்கள் அதில் புகார்கள் சார்ந்து தெரிவிப்பதே இல்லை.கோவை மாணவி சம்பவத்தில், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தும், உரிய ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை கூறுகையில், ''பள்ளிகளில் செயல்படும், மற்ற குழுக்களை போல, புகார் கமிட்டி குழு அமைத்து, வலுப்படுத்த வேண்டும். இக்குழுவில், வகுப்பு வாரியாக மாணவ பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். மாதமொருமுறை குழுவை கூட்டி, மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்,'' என்றார்.இதுதான் சரியான தீர்வு!வகுப்பறைதோறும் புகார் பெட்டிகள் வைக்க அரசு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியர் தங்கள் புகாரை, எளிதில் வெளிப்படுத்த இது வாய்ப்பளிக்கும். இந்த பெட்டியை, புகார் பெட்டி குழுவின் முன்னிலையில், திங்கள்தோறும் திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட வலியுறுத்துகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X