கோவை:பணி மேம்பாட்டு ஆணை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை உரிய காலத்தில், வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக் கல்லுாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுக் கல்லுாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வீரணி கூறியதாவது:தமிழகத்தில் கடந்த, 2007, 2008, 2009, 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி மேம்பாடு ஆணை, இதுவரை வழங்கப்படவில்லை.இவர்கள் 2011ம் ஆண்டு முதல், பணி மேம்பாட்டுக்கு தகுதிப் பெற்றும் அதற்கான ஆணை வழங்கப்படாமல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக தாமதமாக பணி மேம்பாட்டின் முதல் நிலையான ஏ.ஜி.பி., 6000 - 7000 ஆணை, 2015 ஏப்.,1 முதல் பணப்பயனும், அதற்கு முந்தைய காலத்தில் இருந்து பணிபயனும் வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.2016ம் ஆண்டு முதல் பணிமுன்னடைவுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, அதற்கான ஆணை வழங்க பல முறை கோரிக்கை, ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கடந்த ஆட்சியின் இறுதியில் வழங்கப்பட்ட பணி முன்னடைவுக்கான அரசாணை, கல்லுாரி கல்வி இயக்குனரின் செயல்முறை கடிதம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.தவறான தகவல்களால் ஆசிரியர்களின் பணிமுன்னடைவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் உள்ளன. பணப்பயன், பணிப்பயன் கிடைக்காமல் உள்ளனர்.இதேபோல், கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்காமல் உள்ளது.அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட உறுப்பு கல்லுாரிகளில், தேவையான ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தவும், முதல்வர் பணியிடங்களை நிரப்பவும் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE