பொது செய்தி

தமிழ்நாடு

கன்னிமாரா நுாலக வளாகத்தில் மழை நீர் அகற்றும் பணி தீவிரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
எழும்பூர் : கன்னிமாரா நுாலக வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி, தீவிரமாக நடக்கிறது.எழும்பூர் பாந்தியன் சாலையில் புகழ்பெற்ற கன்னிமாரா நுாலகமும், அதன் அருகே அருங்காட்சியகமும் உள்ளது. சமீபத்தில் கொட்டி தீர்த்த மழைக்கு தேங்கிய நீர் முழுதும் வடியவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெய்த திடீர் மழைக்கு, அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது.அவற்றை அகற்ற வேண்டும்

எழும்பூர் : கன்னிமாரா நுாலக வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி, தீவிரமாக நடக்கிறது.

எழும்பூர் பாந்தியன் சாலையில் புகழ்பெற்ற கன்னிமாரா நுாலகமும், அதன் அருகே அருங்காட்சியகமும் உள்ளது. சமீபத்தில் கொட்டி தீர்த்த மழைக்கு தேங்கிய நீர் முழுதும் வடியவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெய்த திடீர் மழைக்கு, அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது.அவற்றை அகற்ற வேண்டும் என்பதற்காக, நேற்று காலை காசா மேஜர் சாலையிலிருந்து, பாந்தியன் சாலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை சென்ற வாகனங்கள் மாண்டியத் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.மழை நீர் அகற்றப்பட்ட பின், வாகன போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X