கேரம் போட்டி பரிசளிப்பு விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரம் போட்டி பரிசளிப்பு விழா

Added : நவ 24, 2021
Share
புதுச்சேரி : கேரம் போட்டியில் சாதித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பொதுத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கேரம் போட்டி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம் தேதி துவங்கியது. ஆண், பெண்களுக்கு தனித்தனியே போட்டி நடத்தப்பட்டது.தனிநபர் ஆண் பிரிவில் டில்லிபாபு, பெண்கள் பிரிவில் ஆயிஷா சஜீத் கான் முதலிடம் பிடித்தனர்.குழு விளையாட்டு ஆண்கள் பிரிவில்

புதுச்சேரி : கேரம் போட்டியில் சாதித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பொதுத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கேரம் போட்டி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம் தேதி துவங்கியது.

ஆண், பெண்களுக்கு தனித்தனியே போட்டி நடத்தப்பட்டது.தனிநபர் ஆண் பிரிவில் டில்லிபாபு, பெண்கள் பிரிவில் ஆயிஷா சஜீத் கான் முதலிடம் பிடித்தனர்.குழு விளையாட்டு ஆண்கள் பிரிவில் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம் நிறுவனம், பெண்கள் பிரிவில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு முதலிடம் பிடித்தன.பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி அமெச்சூர் கேரம் சங்க தலைவர் ஜெகஜோதி வரவேற்றார்.எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனுவாஸ் அசோக், எல்.ஐ.சி., தலைமை மேலா ளர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றி, பரிசு வழங்கினர்.அகில இந்திய கேரம் கூட்டமைப்பு பொது செயலாளர் பாரதிநாராயணன், பன்னாட்டு கேரம் கூட்டமைப்பு பொது செயலாளர் நாராயணன், புதுச்சேரி அமெச்சூர் கேரம் சங்க கவுரவ தலைவர் எழிலன், செயலாளர் ஞான இருதயராஜ் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X