பொது செய்தி

தமிழ்நாடு

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : ன்னை, கொளத்துார் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சைவ சித்தாந்த வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.சட்டசபை மானிய கோரிக்கையின் போது, அறநிலையத் துறை சார்பில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.அதன்படி, சென்னை, கொளத்துாரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி

சென்னை : ன்னை, கொளத்துார் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சைவ சித்தாந்த வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.சட்டசபை மானிய கோரிக்கையின் போது, அறநிலையத் துறை சார்பில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி, சென்னை, கொளத்துாரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இக்கல்லுாரியில் ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் வகையில், சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விண்ணப்ப கட்டணம் இல்லை. சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்தப்படும். சான்றிதழ் படிப்பிற்கான கல்வி கட்டணம் கல்லுாரி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்.ஆன்மிகம் தொடர்பான வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பித்து பயனடையலாம் என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X