பொது செய்தி

இந்தியா

மீன் இறங்கு தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மீனவர்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பாகூர் : மூ.புதுக்குப்பம் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த மீன்பிடி படகு நிறுத்தும் தளத்தை மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.பாகூர் தொகுதி, மூ.புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில், கடந்த 2009ம் ஆண்டு, 10 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கும் தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டதுமுதற்கட்டமாக முகத்துவார பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு படகு நிறுத்தும் தளம்
 மீன் இறங்கு தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மீனவர்கள்

பாகூர் : மூ.புதுக்குப்பம் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த மீன்பிடி படகு நிறுத்தும் தளத்தை மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.பாகூர் தொகுதி, மூ.புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில், கடந்த 2009ம் ஆண்டு, 10 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கும் தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது

முதற்கட்டமாக முகத்துவார பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு படகு நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டது.இதனிடையே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் நீர் உட்புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதனால், இத்திட்டத்தை செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டது.கடந்த 10 ஆண்டிற்கு மேலாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன்பு மணப்பட்டு கிராமத்தில் வனத்துறை சார்பில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, 'விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூ.புதுக்குப்பத்தில் மீன் இறங்கு தளம் திட்டத்தை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தற்போது, மூ. புதுக்குப்பம் முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் கடலில் கலந்து வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, கிராம மீனவ பஞ்சாயத்தார் முடிவு செய்தனர்.இதற்காக, தங்கள் செலவில் ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக பாதை ஏற்படுத்தி, படகு தளத்திற்கு வழி அமைத்தனர்.இதுவரை கடற்கரை மணலில் படகுகளை நிறுத்தி வைத்து மீன் ஏலம் நடைபெற்று வந்தது.தற்போது ஜெட்டியில் படகுகளை நிறுத்தி வைத்து, அங்கேயே மீன்கள் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது.முதல்வர் அளித்த வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக, முக துவார பகுதியில் விடுபட்டுள்ள பணியை மீண்டும் துவங்கிட வேண்டும் என புதுக்குப் பம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X