பொது செய்தி

தமிழ்நாடு

'பேட்டரி' குப்பை வண்டிகளில் பாட்டு நின்று மீண்டும் 'விசில்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் 'பேட்டரி' வாகனங்கள் பலவற்றில், ஒலிப்பெருக்கி பழுதால் பாடல் நிறுத்தப்பட்டு, மீண்டும் 'விசில்' ஒலிக்கத் துவங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ஏழு மண்டலங்களில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிறுவனத்தின் சார்பில், வீடு வீடாக குப்பை சேகரிப்போருக்கு

சென்னை : மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் 'பேட்டரி' வாகனங்கள் பலவற்றில், ஒலிப்பெருக்கி பழுதால் பாடல் நிறுத்தப்பட்டு, மீண்டும் 'விசில்' ஒலிக்கத் துவங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஏழு மண்டலங்களில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிறுவனத்தின் சார்பில், வீடு வீடாக குப்பை சேகரிப்போருக்கு 'பேட்டரி' வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. துப்புரவு தொழிலாளர்கள், வீடு வீடாக 'விசில்' அடித்து குப்பை சேகரித்து வந்தனர்.இதற்கு மாற்றாக, மாநகராட்சியின் 'பேட்டரி' குப்பை வாகனத்தில், பாடல் ஒலிக்கப்பட்டது.'ஓஹோ, நம்ம ஊரு... செம ஜோரு... சுத்திப்பாரு... சுத்தம் பாரு...' எனத் துவங்கும் இந்த பாடல், அனைவரின் வரவேற்பை பெற்றது.கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, பல 'பேட்டரி' வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மற்றும் பாடல் பதிவிற்கான தொழில்நுட்பம் பழுதடைந்தது.இதனால், பல இடங்களில் மீண்டும் பழையபடி 'விசில்' ஒலிக்கத் துவங்கியுள்ளது. இது, இல்லத்தரசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X