இது உங்கள் இடம்: பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!| Dinamalar

இது உங்கள் இடம்: பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!

Added : நவ 24, 2021 | கருத்துகள் (99)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் முடிவை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இரண்டாம் பசுமைப் புரட்சியை காணும் வாய்ப்பை, விவசாயிகள் இழந்துள்ளனர். 'உழுபவனுக்கு, விளை பொருளுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடு' என வாய்
Farmers Protest, Farm Laws, PM Modi, Modi, Narendra Modi,நரேந்திர மோடி,மோடி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் முடிவை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இரண்டாம் பசுமைப் புரட்சியை காணும் வாய்ப்பை, விவசாயிகள் இழந்துள்ளனர். 'உழுபவனுக்கு, விளை பொருளுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடு' என வாய் கிழியப் பேசியோர், அந்த உரிமையை தந்த சட்டத்தை திரும்பப் பெற போராடியது, ஒரு, 'டிராஜடி!'

எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால், போலி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், ஒரு நல்ல சட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் செய்திருக்கிறார். பஞ்சாப், ஹரியானா, உ.பி., போன்ற சில மாநிலங்களில் மட்டுமே, இந்த வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு இருந்தது. மூன்று சட்டத்தை வாபஸ் பெற்றதற்கு, அம்முன்று மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பதும் ஒரு காரணி ஆகி விட்டது.


latest tamil news


'தேர்தலுக்காக, பிரதமர் மோடி சரண்டர்' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யலாம். ஆனால், 'ஸ்டாப் லாஸ் கேஸ்' என சொல்வது போல, வீணான நஷ்டத்தை தவிர்க்க, பிரதமர் மோடி முனைந்திருக்கிறார். இது ஹிந்து -- சீக்கியர் மோதலுக்கும் வழி வகுக்கலாம் எனும் உளவுத்துறை ஆலோசனையும், பிரதமர் மோடி இம்முடிவை விரைவுப்படுத்தி இருக்கிறது. தவிர, இச்சட்டம் அமலாகவே இல்லை; ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திரும்பப் பெற்றிருக்கிறது. 'தட்ஸ் ஆல்!'

இதில், பா.ஜ.,வுக்கு எந்த நஷ்டமுமில்லை. மேலும் பிரதமர் மோடி வழக்கமான அதிரடியாக, இதை விட பெரிய சட்டத்தை விரைவில் அமல்படுத்த வாய்ப்பு அதிகம். மோடியை மக்கள் ஆதரித்ததே, அவரின் அதிரடி நடவடிக்கைக்காக தான்; அதனால் அவர் சோர்ந்து விட மாட்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X