இந்தியா

புதுச்சேரியில் மழை பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு ... வேளாண் இயக்குனரை தாக்கிய விவசாயிகள்

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி , நவ. 24-புதுச்சேரியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர். பாகூரில் ஆய்வு செய்தபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி, 29 நாட்களில் 94 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டில் இதுவரை, ஆண்டு சராசரி அளவான 130 செ.மீ., கடந்து, 218 செ.மீ., மழை
புதுச்சேரியில் மழை பாதிப்புகளை மத்திய குழு  ஆய்வு ...   வேளாண் இயக்குனரை தாக்கிய விவசாயிகள்

புதுச்சேரி , நவ. 24-புதுச்சேரியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

பாகூரில் ஆய்வு செய்தபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி, 29 நாட்களில் 94 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டில் இதுவரை, ஆண்டு சராசரி அளவான 130 செ.மீ., கடந்து, 218 செ.மீ., மழை பெய்துள்ளது.தொடர் மழையால் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.

இந்நிலையில், வீடூர் மற்றும் சாத்தனுார் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றியதால், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களையும், ஏராளமான குடி யிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.மழை பாதிப்புகளை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜிவ்சர்மா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி வந்தனர்.தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். மழை சேதம் குறித்த அறிக்கை மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டது.பிள்ளைச்சாவடிஇரவு புதுச்சேரியில் தங்கிய மத்திய குழு, நேற்று காலை 8:45 மணிக்கு பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டனர். அப்போது, மத்திய குழுவிடம், கடல் அரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.

இந்திரா சிக்னல்

ஒவ்வொரு மழையின்போதும், இந்திரா சிக்னலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து, மத்திய குழுவுக்கு விளக்கப்பட்டது.அப்போது, ரமேஷ் எம்.எல்.ஏ., 'இந்திரா சிக்னலில் தேங்கும் மழைநீரால், நடேசன் நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.என்.ஆர். நகர்மணவெளி தொகுதி இடையார்பாளையம் அருகில் உள்ள என்.ஆர். நகருக்கு சென்ற மத்திய குழுவினரை, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் அழைத்து சென்று, சேத பகுதிகளை காண்பித்தனர்.

அப்போது, 'வெள்ளத்தால் பாதித்தபோது அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை.புதுச்சேரி - கடலுார் சாலையில், நோணாங்குப்பம் பழைய பாலம் உடைந்து விட்டதால், புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். அப்போது, சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.பாகூரில் தள்ளுமுள்ளுபாகூரில் பரிக்கல்பட்டு சாலையில் மழைநீரில் மூழ்கி கிடந்த நெல் வயல்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். அவர்களுக்கு, வேளாண் இயக்குனர், நெற்பயிர் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.அப்போது, அப்பகுதி விவசாயிகள் வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தியை முற்றுகையிட்டு, 'நாங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது எட்டிகூட பார்க்கவில்லை.

தற்போது எதற்கு வந்தீர்கள்' என வாக்குவாதம் செய்தனர். மேலும், 'பாலகாந்தியே திரும்பி போ' என கோஷமிட்டனர்.சில விவசாயிகள் பாலகாந்தியை முதுகில் குத்தி, விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடன், சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன், இன்ஸ் பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார், விவசாயிகளை சமாதானம் செய்து, விலக்கி விட்டனர்.அதன் பிறகு மத்திய குழு வினர், முள்ளோடையில் சேதமடைந்த மின் சாதன பொருட்களை பார்வையிட்டனர். அத்துடன் ஆய்வை முடித்துக் கொண்டு, காலை 10:15 மணிக்கு கடலுார் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் சிவா தலைமையில், எம்.எல். ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் மத்திய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.ராஜீவ் சர்மா தலைமை யிலான குழுவினர், காரைக்காலில் மழை சேதத்தை பார்வையிட்டு, மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விவசாயி ஆவேசம்பங்காரு வாய்க்கால் நீர் ஆதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ' மழை வெள்ளத்தில் பாகூர் தத்தளித்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. அப்போது வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி வந்து பார்க்கவில்லை. இப்போது, மத்திய அரசின் குழுவுடன் வருவது ஏற்புடையது இல்லை.மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் விதை மானியம், ஊக்கத்தொகை எதையும் கொடுக்காமல் விவசாயிகள் விரோத போக்கை கடைபிடிக்கும், இயக்குனர் பாலகாந்தியை மாற்ற வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-202122:14:59 IST Report Abuse
Sriram V Nowadays it's becoming tr that anyone can attack anyone in the name of farmers because they are not governed by law
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X