தமிழ்நாடு

நலத்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : நலத்துறையை கண் டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது.மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் விஜயராணி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது, 20க்கும் மேற்பட்ட 'டிசம்பர் - 3' மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், கடந்த முறை

சென்னை : நலத்துறையை கண் டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது.மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் விஜயராணி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.

அப்போது, 20க்கும் மேற்பட்ட 'டிசம்பர் - 3' மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், கடந்த முறை பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவை மனுக்கள் குறித்து, கலெக்டரிடம் கேள்வி எழுப்பினர். அதேபோல், மழைக்கால நிவாரண உதவிகளை குறித்து கேட்டனர்.கலெக்டரிடம் உரிய பதில் கிடைக்காததால், சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை கலெக்டர் அவரது அறையில் அழைத்து பேசிய பின், கலைந்து சென்றனர்.இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் கண் துடைப்புக்கு மனுக்கள் பெறப்படுகின்றன. பருவமழையால் ஏராளாமான மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுவரை, நலத்துறை சார்பில் எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X