பொது செய்தி

தமிழ்நாடு

கடமைக்கு 'பேட்ச் ஒர்க்' பொதுமக்கள் அதிருப்தி

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் தொடர் மழை காரணமாக, ஏராளமான சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளன.சில பகுதிகளில் சாலையில் தேங்கிய மழை நீரால் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, பழுதடைந்த சாலைகளில், கருங்கல், சிமென்ட் கலவை கொண்டு, 'பேட்ச் ஒர்க்'

சென்னை : சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் தொடர் மழை காரணமாக, ஏராளமான சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளன.சில பகுதிகளில் சாலையில் தேங்கிய மழை நீரால் பள்ளங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, பழுதடைந்த சாலைகளில், கருங்கல், சிமென்ட் கலவை கொண்டு, 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு வருகிறது.அப்பணியை மேற்கொள்பவர்கள் கலவை கொட்டிய இடத்தில் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது வாகனங்கள் செல்லாமல் கற்களை கொண்டு தடுப்பு அமைக்க வேண்டும்.போக்குவரத்து அதிகம் உள்ள அகலமான சாலைகளில், ஒரு பகுதியில், 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைத்து,

மற்றொரு புறம் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.அதை விடுத்து பள்ளங்களில் கலவை கொட்டி, சமன்படுத்தாமல் செல்கின்றனர். இதனால், அடுத்த அரை மணிநேரத்திற்குள் வாகன போக்குவரத்தால் கலவை காணாமல் போகிறது.இதுபோன்ற பயனற்ற 'பேட்ச் ஒர்க்' பணியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X