இந்தியா

புதுச்சேரிக்கு கூடுதல் உரம் தேவை மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மழையால் பாதித்த விவசாய பயிர்களை பாதுகாத்திட 100 டன் டி.ஏ.பி., உரங்களை வழங்கிட வேண்டும் என, மத்திய அரசிடம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வலியுறுத்தினார்.மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நேற்று அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார்

புதுச்சேரி : மழையால் பாதித்த விவசாய பயிர்களை பாதுகாத்திட 100 டன் டி.ஏ.பி., உரங்களை வழங்கிட வேண்டும் என, மத்திய அரசிடம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நேற்று அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசியதாவது:புதுச்சேரியில் சம்பா பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அடி உரம் மற்றும் மேல் உரமிட்டு பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக பெய்த கனமழையில், உரங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால், மாநிலத்தில் உரத் தேவை அதிகரித்துள் ளது. குறிப்பாக டி.ஏ.பி., உரம் 100 டன் தேவை. விவசாய விளை பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த தேவையான உரங்கள் வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X