சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூர்யாவிற்கு எதிராக போராடினால் தங்கக்காசு; வன்னியர் சங்க மாநில நிர்வாகி அறிவிப்பு

Added : நவ 24, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
தஞ்சாவூர் : 'நடிகர் சூர்யா உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தும் நபர்களுக்கு, அரை பவுன் தங்கக்காசு பரிசு வழங்கப்படும்' என்று, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணை பெற்று 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், குருவையும் கேவலப்படுத்தியதாக
Jai Bhim, Actor Suriya, Vanniyar Sangam, Jai Bhim Controversy

தஞ்சாவூர் : 'நடிகர் சூர்யா உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தும் நபர்களுக்கு, அரை பவுன் தங்கக்காசு பரிசு வழங்கப்படும்' என்று, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.

மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணை பெற்று 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், குருவையும் கேவலப்படுத்தியதாக ஜெய்பீம் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை கைது செய்யக் கோரியும், தஞ்சாவூரில் நேற்று வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


போராட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை பொறுக்க முடியாது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த மாதம், 23ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும் இளைஞர்களையும் திரட்டி, அக்னி குண்டத்தில், நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்தப்படும்.

அப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு, அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் காசு டாலர் வழங்கப்படும். அதேபோல் நடிகர் சூர்யா வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தால், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, ஆண்கள், பெண்கள் சாணிப்பாலால் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202116:19:28 IST Report Abuse
SUBBU, MADURAI இந்த நாலடி குள்ளன் நாலடியானுக்கு எவ்வளவு அகங்காரம் இருந்தால் இந்த பிரச்சனையை இன்னும் இழுத்துக் கொண்டு போவான்.இதிலிருந்தே தெரிகிறது அவன் திமிர் தனம்.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
24-நவ-202115:38:30 IST Report Abuse
velan சாதிகள் இல்லையடி பாப்பா .... அனைவரும் ஒன்று . திரைப்படத்தில் ஏதேனும் குற்றம் என கருதினால் நீதிமன்றத்தில் வழக்கு தொரடரலாம் .... போராட்டம் செய்யலாம் அறவழியில்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25-நவ-202106:17:53 IST Report Abuse
meenakshisundaramஅமெரிக்காவிலே உட்காந்துக்கிட்டு சாதிகள் இல்லையடி 'ன்னு பாடறது ரொம்ப ஈஸி இங்கே வந்து சொல்லணும் .சூர்யா படம் ஒன்றே போதுமே -தமிழ் நாட்டிலே எத்தனை சாதின்னு சொல்ல ?மறைந்து கிடந்த அநேக சாதியினரை வெளியே கொண்டாந்திரிச்சு வாக்கு வாங்கி தயார் பண்ண ரொம்ப ரொம்ப உதவும் ....
Rate this:
sankar - Nellai,இந்தியா
25-நவ-202120:21:40 IST Report Abuse
sankarதம்பி - இந்த படமே சாதியம்தான் பேசுகிறது...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-நவ-202114:54:55 IST Report Abuse
vbs manian எல்லை மீறி போகிறார்கள். நடிகர் கொஞ்சம் விட்டு கொடுத்து வருத்தம் தெரிவித்து முடிவுக்கு கொண்டுவரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X