இந்தியா

ஒருமைப்பாட்டு வார விழா

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடப்பட்டது.முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது.துறை இயக்குனர் பத்மாவதி வரவேற்றார். வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் தலைமை வகித்தனர். ஜான்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.அரசு செயலர் உதயக்குமார், புனித ஜான்மரி சர்ச் அருள்தந்தை டோமினிக் ரொசாரியோ, அரசு காஜியார் மௌலவி அல்ஹாபிழ், அல்ஜாஜ் இஜாவுத்தீன் மன்பயீ, சீக்கிய சமூக பிரதிநிதி அர்விந்தர் சிங். ஜெயின் சங்க செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னதாக அனைவரும் முன்னாள் பிரதமர் இந்திரா உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். உதவி இயக்குனர் சுகந்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X