தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் யார்? அதிகாரிகள் இடையே கடும் போட்டி

Added : நவ 24, 2021
Share
Advertisement
தாம்பரம் ; தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியின் கமிஷனர் பதவியை பிடிப்பதில், அரசு அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இவர்களில் சிலர் பதவியை பிடிப்பதற்காக, ஆளுங் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். தகவல்சென்னை புறநகரில் உள்ள, வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து,

தாம்பரம் ; தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியின் கமிஷனர் பதவியை பிடிப்பதில், அரசு அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இவர்களில் சிலர் பதவியை பிடிப்பதற்காக, ஆளுங் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். தகவல்சென்னை புறநகரில் உள்ள, வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து, தாம்பரத்தை மையமாக வைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட வேண்டும் என, பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்படி, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி, அரசாணை அரசிதழில் வெளியானது. அரசாணை வெளியிடப்பட்டு, பல நாட்கள் ஆகியும், இன்னும் புதிய மாநகராட்சிக்கான கமிஷனர் நியமிக்கப்படவில்லை. சென்னையின் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாலும், சென்னை புறநகரின் முக்கிய பகுதியாகவும் திகழ்வதால், இந்த மாநகராட்சியின் முதல் கமிஷனர் என்ற பெருமையை பெறுவதில், அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக ஆளுங் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன், மூத்த அரசு அதிகாரிகள் சிலர் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது.

ஆர்வம்இது குறித்து, மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பதவியை பிடிக்க, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அல்லாத, அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து, தற்போது ஈரோடு மாநகராட்சி கமிஷனராக உள்ள, இளங்கோவன், தாம்பரம் நகராட்சியின் முன்னாள் கமிஷனர் சிவசுப்ரமணியன், ஆவடி மாநகராட்சி கமிஷனர், சிவக்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.தவிர, ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு நெருக்கமாக உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரும், கமிஷனர் பதவிக்கு அவர்களிடம் பேசி வருகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள மாநகராட்சி என்பதால், சென்னை நகரின் வளர்ச்சியால், புதிதாக நருக்கு வருவோர், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், அதிகமாக குடியேறி வருகின்றனர். இதனால், மாநகராட்சியின் மக்கள் தொகை நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கும். தற்போதைய சூழலில், தாம்பரம் மாநகராட்சியில் போதிய அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. மாநகராட்சிக்கு அந்தஸ்த்துக்கு ஏற்ப மட்டுமின்றி, மக்கள் தொகைக்கு ஏற்பவும் அடிப்படை வசதிகளை செயல்படுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்ற அதிகாரியே மாநகராட்சியின் கமிஷனராக, நியமிக்கப்பட வேண்டும். தாம்பரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X