பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த 301 பேருக்கு சிகிச்சை

Added : நவ 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 301 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 1,28,718 ஆக அதிகரித்தது. தொற்று பாதித்த 63 பேர் மருத்துவமனைகளிலும், 238 பேர் வீடுகளில்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 301 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 1,28,718 ஆக அதிகரித்தது. தொற்று பாதித்த 63 பேர் மருத்துவமனைகளிலும், 238 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,547 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோர் எண்ணிக்கை 1870 ஆக உள்ளது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 1376 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 3,333 பேர் போட்டுக் கொண்டனர். இதுவரை மாநிலத்தில் 11,81,386 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X