டிராபிக் இன்ஸ்., மகளை மிரட்டிய வாலிபர் சிக்கினார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராபிக் இன்ஸ்., மகளை மிரட்டிய வாலிபர் சிக்கினார்

Added : நவ 24, 2021
Share
தாம்பரம், : தேனாம்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வத்தின் மகளை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் கேட்ட வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், பொன்னியம்மன் கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம்; தேனாம்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர். இவரது மகள் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:நான் 2014ல்,

தாம்பரம், : தேனாம்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வத்தின் மகளை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் கேட்ட வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், பொன்னியம்மன் கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம்; தேனாம்பேட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர். இவரது மகள் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:நான் 2014ல், பல்லாவரத்தில் உள்ள கல்லுாரி ஒன்றில் பி.பி.ஏ., படித்தேன். உடன் படித்த பாஸ்கரன் என்பவர், 2015ல் என்னை காதலிப்பதாக கூறினார்; ஏற்க மறுத்தேன். ஆவணங்கள்

இதனால், கல்லுாரியில் உள்ள கழிப்பறையில் எனக்கு தெரியாமல் ரகசியமாக என்னை தவறான படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். இதற்கு அஸ்வின் என்பவரும் உடந்தையாக இருந்தார்.அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி வந்தனர். என் மீது ஆசிட் வீசி விடுவதாக மிரட்டி, தங்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என, மிரட்டினர்.அதன் பின், அந்த கல்லுாரியை விட்டு நான் நின்றுவிட்டேன். பின், மதுரவாயலில் உள்ள கல்லுாரி ஒன்றில் சேர்ந்தேன்.இந்நிலையில், பாஸ்கரன் மற்றும் அஸ்வின் ஆகியோர், என் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை, சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க, 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டினர். தற்போது எனக்கு சூர்யா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.அவரையும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களிடம் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'வீடியோ'இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்த, அஸ்வின், 25 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். பாஸ்கரனை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் அஸ்வின் அளித்துள்ள புகார்:போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வத்தின் மகள், அவரது வருங்கால கணவர் சூர்யா, மாமியார் கிரிஜா மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்கள், என்னையும், பாஸ்கரனையும் ஓசூருக்கு காரில் கடத்திச் சென்றனர். எங்களை நிர்வாணமாக்கி 'வீடியோ' எடுத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக போலீசார், செல்வம், சூர்யா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X